பக்கம்:தமிழஞ்சலி.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழஞ்சலி எனக்கு மட்டுமேன் அந்தச் சிறப்பு? பெருமை! வீரம் தோற்றம்: பண்பு! வீரத்தின் விளைநிலம் தமிழகம்! விவேகத்தின் பிறப்பிடம் அமைதிக்கு வித்தகம்! உலகச் சிறப்புக்கு உள்ள காரணங்கள் அனைத்தும் - உருவான இடமே தமிழ் நிலம்தானே! அந்த நிலத்திலே தோன்றிய மரம் நானல்லவா? எனக்குரிய பெயரும் வேங்கைதானே! எதிரியின் எலும்பைப் பொடியாக்கி, மாவாக்கி, வீரத் தாய் நிலத்திற்கு வீசும் தமிழர்களைப் போல - வியந்து நிற்கிறேன். மானம் என்ற பண்பைப் பெற்ற தமிழகத்தில்தானே, மானத்தால் பிறந்து, மானத்தால் வளர்ந்து - மானத்தால் சாகிறார்கள் தமிழர்கள். மோன நிலையிலே, முகிழ்த்த தத்துவத்தால் முளைத்த இனம் - தமிழ் இனம். ஞான ஒளியால் ஞாலத்தில் உருவான வீர இனம்! தொல்புகழ் பூண்ட மரபு - தமிழர் திருக்குலம். அந்த மண்ணிலே பிறந்த மரமல்லவா நான். எனக்கும் எங்கே போகும் அவை: எனக்குப் பெயர் வேங்கையாயிற்றே. நானா கோழை போல் குனிந்து கிடப்பேன்? அந்தத் தண்ணிரைப்பருகித் தானே என் உயிரணுக்கள் மூச்சு விடுகின்றன. எங்கே ஏகும் அந்த வீரப் பெருமூச்சுக்கள்? 56

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழஞ்சலி.pdf/66&oldid=863624" இலிருந்து மீள்விக்கப்பட்டது