பக்கம்:தமிழஞ்சலி.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழஞ்சலி அந்த வேங்கை மரத்திலே பூக்கும் எனக்குத்தான் வேங்கைப் பூ என்ற பெயர். நான் மஞ்சள் வண்ணமாக இருப்பேன். கொத்துக் கொத்தாக மலர்வேன். அழகிலே சிறந்த பூ வேங்கைப் பூ, காணக் காணக் கவர்ச்சி மிக்கப் பூ. வேங்கைப் பூவின் தாது; பொன் பொடியன்ன மின்னும். பூ பூக்கத் தொடங்கும்போது, பெரும்பாலான அரும்புகள் ஒருங்கே மலரும். 'அரும்பல மலர்ந்த கருங்கால் வேங்கை என்று: அதன் மலர்ச்சியை ஒரு புலவர் பாடினார். வேங்கைப் பூ மஞ்சள் நிறம்தான் என்று நான் கூறினால் - நீ நம்புவாயா? அதற்கும் சில இலக்கிய ஆதாரங்கள் இருக்கின்றன தம்பி. "பொன்னினர் வேங்கை தாய ஒங் குமலை அடுக்கத்துப்" என்று 'நற்றிணையில் வரும் 28-ம் பாடல் நவில்கிறது. "பொன்னினர் வேங்கைப் பூஞ்சிலைச் செலி இயர்" என்று, அதே இலக்கியத்தின் 151-ம் பாடலில் காணப்படுகிறது. "பெருவரை வேங்கைப் பொன்மருள் நறுவீ" என்று 'ஐங்குறுநூறு அறைகிறது. 58

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழஞ்சலி.pdf/68&oldid=863628" இலிருந்து மீள்விக்கப்பட்டது