பக்கம்:தமிழன், வெள்ளியங்காட்டான்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

11



உழவினைத் தொழிலாய்க் கொண்டவ்
வூராருக் குழைத்துத் தேய்ந்த
கிழவனை விடவும், கேட்டுக்
கிளர்ச்சியுற் றெழுந்து வந்தாள்,
'கொழுவினை யுருக்கிக் காதில்
கொட்டினா' னெனக்கு மைந்தே
இழிவினை எண்ணக் கூட
இயலாத இதயப் பாராள்!

'ஏயெ'ன எதிர்த்துச் செங்கன்
எதுவொன்றும் இயம்பா முன்னே
தாயினும் பரிந்து நோக்கித்
"தடங்கண்டு வந்தாய் செங்கா!
பாயினும் பசுவை நோதல்
பாவமென் பதனை யோர்வாய்!
நீயினும் ஏன்நிற் கின்றாய்?
நிழலில்வந் துட்கார்" என்றாள்.