பக்கம்:தமிழன், வெள்ளியங்காட்டான்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

13



பல்வீழ்ந்து முளைத்த பிள்ளைப்
பருவத்தி லிருந்திவ் வூரில்
நெல் வீழ்ந்து கிடக்க நானும்
நிலத்தினி லுழைத்தேன்; நேராய்க்
கல்வீழ்ந்த தெனவே காதில்
கலங்கிட என்னைக் காய்ந்தோர்
சொல்வீழ்ந்த தில்லை! யின்றோ,
சொல்லநா சுருங்கிற் றென்றான்.

திங்களொத் திலங்கா நின்ற
திருமுகச் செவ்வி தீர்ந்து,
செங்கனின் செயலும் சொல்லும்
செல்வனுக் கேற்கா தேனும்.
இங்கித மற்ற மாற்றம்
இயம்பிடி னின்னா தென்னச்
சங்கையற் றுணர்ந்த பாராள்
சமயத்துக் கேற்பச் சொன்னாள்:

"பேசட்டும், பெரியோர் பெட்பைப்
பேணுத லறியார் வாயும்;
கூசட்டும், அவர்தம் கூற்றைக்
கூறுதற் குனது நாவும்!
தூசொட்டின் துணியால் தட்டித்
துடைத்திட்டால் சரிதான் செங்கா!
கோசிட்ட சாம்பார் தோசை
கொள்ள நீ குந்திங்" கென்றே.

புவித்தல மனைத்தும் போற்றப்
புகழ்பூத்த தமிழ்பண் பாட்டைத்
தவித்தநெஞ் சுடனன் றய்யன்
தன்னிரு கண்முன் கண்டு
குவித்திடும் முகத்தைக் கூர்ந்து
குறிப்பாக நோக்கி அப்பன்
கவித்தரம் பற்றிப் பேசக்
கம்பனை யிழுத்து வைத்தான்.