பக்கம்:தமிழன், வெள்ளியங்காட்டான்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

14

“'சேலுண்ட வொண்க ணாரிற்
றிரிகின்ற செங்கா லன்னம்
மாலுண்ட' பாட்டைக் கேட்டு
மகிழ்வுண்டேன் நேற்று; மற்றிந்
நீலுண்ட நெடுவான் போர்த்த
நிலத்தினில் நிகராய் நிற்கும்
நூலுண்டோ? ஆகா! நுங்க
நோற்றவர் தமிழ ரன்றோ?


சேலம்மாங் கனியை மேல்தோல்
சீவியே சிறுதுண் டாக்கி,
ஏலம், கற் கண்டு, தேன்,நெய்
இசைவறிந் தேற்கப் பெய்து,
கோலவெண் ணிலவு, தென்றல்,
கொடிமுல்லை மணமுங் கூட்டி
மாலுற மனைவி யூட்டும்
மகிழ்வினும் இனித்த தென்றே.


வழக்கத்தை விட்ட செங்கன்
வணங்காம லிருந்த தற்காய்
ஒழுக்கத்தை விட்ட அய்யன்,
"ஓ நாயே, என்றி கழ்ந்த
இழுக்கத்தை விட்டெ றிந்தாள்
இன்றிவ ளென்மீ' தென்று
பழக்கத்தை விட்டா னப்பன்
பாராட்டின் பண்போ ராதே!


இலைகாலி செய்தான் செங்கன்;
எல்லாமும் எடுத்து மூடி
உலைகாலி செய்தாள் பாராள்;
உள்ளதொன் றுரைத்து விட்டுக்
கலைகாலி செய்தா னப்பன்!
கனமய்யன் கடுத்துட் கார்ந்த
நிலைகாலி செய்தான், 'சற்று
நேரம்போய் வருவே' னென்றே.