பக்கம்:தமிழன், வெள்ளியங்காட்டான்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

3 கண்ணன் வருகை

15

கம்பனன் றருளில் தந்த
கற்பனை கமழ்பூந் தேனைத்
தும்பியொத் துறிஞ வந்த
துணைவியைக் கண்ட அப்பன்,
"கொம்பினை விட்டுக் கூவும்
குயில்பறந் திட்ட" தென்ன,
“வம்புபோய் வாழ்வுற் றாங்கு
வருகிறான், தம்பி" யென்றாள்.


வாய்மொழிக் கோசர் தங்கள்
வளர்புகழ் மரபில் வந்து,
தாய்மொழி தமிழைக் கற்றுத்
தனிப்பெருந் தகுதி வாய்த்துச்
சேய்மொழி யாங்கி லத்தில்
சிறப்புறத் தேர்ந்தோன்; சீராய்க்
காய்மொழி கடிந்து, காதில்
கனிமொழி உதிர்ப்பான், கண்ணன்.


மைத்துனன் வருகை கண்டு
மனம் நனி மகிழா அப்பன்,
"தைத்திடப் பேசும் வாய்க்குத்
தரமான தாட்பாள் வாங்கி
வைத்திருக் கின்றேன்: வா!வுன்
வரவுநல் வரவே" யென்று
கைத்தவன் போல,-ஆனால்,
கலப்பொடும் 'கருடி' விட்டான்.


"அரும்பான மல்லி காஎன்
அகத்தளாய் மலரும் நாளில்,
'கரும்பாலை யாடிக் கையில்
காசுசேர்த் திருந்தும் அப்பா,
துரும்பாக மதித்தென் வாழ்க்கைத்
துணைவன்வாய்க் கெதற்குப் பாழும்
இரும்பாலே தாட்பா ளிட்டார்,'
எனஎண்ணி இகழ்வா” ளென்றான்.