பக்கம்:தமிழன், வெள்ளியங்காட்டான்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை



16

இங்கிதம் ததும்பு மிந்த
எழிலான மாற்றம் கேட்டுச்
செங்கனும் சிரித்தான்; செல்வி
சேர்ந்துடன் சிரித்தாள்; அப்பன்,
அங்கமும் குலுங்க, "ஆகா!
அவ்விதம் அமைந்தால், நல்ல
தங்கத்தால் செய்து மாட்டத்
தவறேன்நா" னெனச்சி ரித்தான்,


"கதிரதில் அனைத்தும் நெல்போல்
காணினும், களத்தில் துாற்றின்
பதரதில் பார்ப்ப தொப்பப்
பாங்கிலா அய்ய னின்றிங்
கெதிரினில் இருந்த இந்த
எளியோனை ஏதொன் றின்றி
அதிர'நா யெ'னவே வைதான்,
அகமெலாம் பதற" என்ருள்.

"வெறுவாயே மென்று மென்று
விழுங்கிடும் தம்பிக் கின்று
முறிவாயே இல்லா நல்ல
முறுக்கிது கிடைத்தால், மூட
மறுவாயே இல்லை! கேட்டு
மறுகிட நேரு மென்ப
தறிவாயே பாரா! ஆயா
தளித்தாயே!” என்ரு னப்பன்.

"பங்கயம் பதிந்த வண்டே
பார்க்குங்கண்' என்னப் பார்த்து,
"மங்குலும் மலரும்; மண்ணில்
மலர்களும் மலரும்; மற்றிச்
செங்கனைப் போன்றோர் மட்டும்
தேசத்தில் தேய்ந்தோ ராயின்,
எங்கிலும் அடுப்பில் பொங்க
எரிமட்டும் மலரா தக்கா!