பக்கம்:தமிழன், வெள்ளியங்காட்டான்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

18

'ஊழினும் உறலொன் றில்லை
உலகி'லென் றுருவை யேற்றுக்
கூழையும் குடிக்கக் கூடாக்
கூலிக்கா யுழைத்துத் தேயும்
ஏழைக ளிடுப்பி லேறி
இருக்கிறேம் நாமும்!- ஏற்றத்
தாழும்நம் தலைமேல் தங்கித்
தழைக்கிறார் தாழா" ரென்றே.

சுந்தர முகமும், கண்ணில்
சுடர்கின்ற ஒளியுங் கூட்டிச்
'செந்தினை மாவில் கன்னம்,
செவி,பிற செய்து சிற்பி,
தந்தனன் உயிரை' யென்னத்
தவழ்ந்துதன் அருகில் வந்த
கந்தனை யேந்தி முத்தம்
கன்னத்தில் வைத்த கண்ணன்.

பசியொரு பக்கம்; பார்ப்பான்
பரிவின்றிப் பகர்ந்த சொல்லின்
இசியொரு பக்க மென்ன
இதயந்தொய் வெய்தி இன்று,
'சுசியொரு பக்கம், சோற்றுச்
சுமையொரு பக்கம், சோர்ந்து
வசியுற நிற்பாள் நீலா
வழக்கம்போ’ லெனவே சென்றான்.