பக்கம்:தமிழன், வெள்ளியங்காட்டான்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

19

4. நிலா வின் நிலைபாடு

'பெற்றோரைப் பெரிது மொத்தே
பிள்ளையும் பிறக்கு' மென்னும்
கற்றோர்தம் கருத்தை மாற்றக்
கண்ணெதிர் காட்சி யாகி,
'உற்றோராக் காக்கைக் கூட்டில்
உதித்ததோர் குயிலிஃ' தென்ன,
மற்றோரும் மதிக்கும் மாதாய்
மதிநல முற்றாள் நீலா!


காற்றிலே இருந்து வந்து
கமழ்கின்ற மணமோ? காணச்
சேற்றிலே இருந்து வந்த
செவ்வல்லி மலரோ? சென்ற
நேற்றிலே இருந்து வந்து
நேர்ந்தநந் நாளோ,- நீலா!
ஊற்றிலே இருந்து ணும்நீ
ரொப்பதோ ருளமு முற்றாள்.


கற்றநம் கண்ணன், கல்விக்
கழகமொன் றமைத்துக் கற்க
வுற்றவர்க் குளத்தி லோயா
தொளியூட்டு கின்றா னென்றே,
பெற்றதன் பெண்ணுக் கேற்ற
பெண்துணை பேணச் சேர்த்தங்
கொற்றறி நிமித்தம் அய்யன்,
ஊக்குவித் தனுப்ப லுற்றான்.


கண்ணணின் கவினைக் கண்டாள்;
கடைபோகக் கற்றா ராய்ந்து,
'தண்ணுமை தாழ்ந்த'தென்னத்
தமிழ்முழங் கினிமை கண்டாள்;
திண்ணிய வொழுக்கங் கண்டாள்;
தெளிவுசெய் திறனைக் கண்டாள்;
மண்ணில்நன் மலரின் மாண்பே
மனிதனில் மணக்கக் கண்டாள்.