பக்கம்:தமிழன், வெள்ளியங்காட்டான்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

20

இளங்கெண்டை யிரண்டு கொண்ட
எழில்மதி முகத்தீர்ங் கண்ணாள்
வளங்கொண்ட வாழ்வு கண்டு
வளர்ந்தவ ளெனினும், 'வாய்மை
களங்கொண்ட கண்ண னின்றிக்
கடைத்தேற லரிது கா'ணென்
றுளங்கொண்டா 'ளிவனே யென்றன்
உடலுயிர்க் குரியோ' னென்றே.


மதிவரக் காத்து நின்ற
மலையெனல் மாண்போ? மல்கி
நதிவரக் காத்து நின்ற
நிரப்பெனல் நிறைவோ?- நீலா
கதவரு காக நின்று
கண்ணனைக் காணக் காத்தாள்.


மாணவி ஆசா னென்னும்
மாண்பினை மறவா மங்கை,
ஆணிவே ராகக் காதல்,
அன்பருந் தருவாய், ஆர்வம்
பேணவே பூத்துக் காய்த்துப்
பெண்மையாய்க் கனிந்து நின்று
காணவே, வந்தான் கண்ணன்,
கடும்பசிக் கமிழ்தாய்க் கண்டே!


'மருவுண்ட மதுவை யுண்டு
மகிழ்ச்சியால் மயங்கி வந்த
கருவண்டு, கமலப் போதாம்
கன்னியின் முகத்தைக் கண்டு,
பிரிவுண்டு போகா மற்றான்
பிணைப்புண்ட' தென்னுங் கண்ணாள்,
வரவுண்ட கண்ண னுண்ணும்
வகையுண்டு பண்ணி வைத்தாள்.