பக்கம்:தமிழன், வெள்ளியங்காட்டான்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

21

"கொல்லைமாந் தளிரைக் கோதும்
குயிலிசை பருகி யுள்ளேன்;
முல்லையின் மணத்தைத் தென்றல்
முகந்தீய அருந்தி யுள்ளேன்;
நல்லியற் கவிதை நாடி
நயம் நுகர்ந் துள்ளேன்: ஆனால்,
மெல்லி!நீ யிடுஞ்சோ றன்றோ
மிக்கது சுவையி லென்றான்".


"அகம்மிக அஞ்சத் தக்க
அடவியில், அமைதி மேவச்
சுகம்மிக நடக்கும் பாதை
சுயமாகக் காட்டும் நீங்கள்
யுகம்மிகு தலைவர்; என்கை
உணவினை யுண்டு வந்து
முகம்மலர் வெய்தின், அஃதென்
முன்செய்த தவமே போலும்!


கோமானே! கோலக் குன்றில்
கொடும்புலி கொன்று தின்ற
ஆமாவின் கன்றுக் குத்தன்
அருமைக்கன் றருந்தும் பாலைப்
பூமேவு புதர்க்கண் போந்து
புகட்டிய பசுவைப் போற்றும்
பாமேவு சுவைக்கிச் சோற்றின்
பல்சுவை யொவ்வா" தென்றாள்.


செங்கதிர் பூத்துக் காலை
செய்கையில், சிறுமை திர்ந்த
பங்கயத் தண்தே னார்ந்து
பாண்வண்டு பாடிற் றேயோ!
கொங்குநந் நாட்டிற் பூத்த
குறிஞ்சிதான் கொட்டிற் றோதேன்!
இங்குநான் இனிய இச்சொல்
எதிர்பார்த்தி ராத தென்றே.