பக்கம்:தமிழன், வெள்ளியங்காட்டான்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

23

கடிந்துகொள் வதற்கும் காட்டும்
காரணம் கானேன்; கண்முன்
படிந்துகொண் டிருக்கு மென்றன்
பாழ்மனை யிருளைப் போக்க
முடிந்திடின் முயல்வே னென்று
முனைபவ ளாயின், 'நீலா
விடிந்தது பொழுது; வேண்டாம்
விளக்கெ'ன விளம்பே னென்றே,

"பிறப்பினில் உயர்வு தாழ்வுப்
பிரிவுகள் பெயரா முன்னே,
வெறுப்பிலா அறிவா ராய்ச்சி
விடியலாய் விரியா முன்னே,
புறப்பொரு ளனைத்தும் மக்கள்
பொதுப்பொரு ளாகா முன்னே,
மறப்பிலாக் காதல் பூத்தால்
மணக்காது மலரே!” என்றான்.

" நாடொருங் கிருந்து துய்க்க;
நவையற வுழுது வித்திக்
காடொருங் கமைந்து, காணக்
கவினுற முளைத்து யர்ந்து,
தேடருஞ் செல்வ மென்னத்
திகழ்ந்திடும் பயிர்தான் தீய்ந்து
வாடிடும் பொழுது, 'வேண்டாம்
வான்றுளி' யென்னா" தென்றாள்.