பக்கம்:தமிழன், வெள்ளியங்காட்டான்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

24

5 பகராளின் பதற்றம்

வானவ ரரக்க ரென்போர்
வாழ்முறை வரலா றெல்லாம்
தேனிவர் தமிழில் செப்பத்
தெவிட்டாது கேட்ட அப்பன்,
கானவர் கானும் முன்பே
கதைமூடி வைத்தன் றய்யன்
போனவன் போனா னாகப்
பொழுதுபோ காதி ருந்தான்.


ஊராய்ந்து கொள்ளு மென்றே
உள்ளுற நம்பி, யூன்றி
ஆராய்ந்து சொன்ன சொற்கள்
அவமாக லாயிற் றேனும்,
சீராய்ந்து சென்றான் தம்பி
சிணுங்காம லெனவே, கண்ணில்
நீராய்ந்து சோரப் பாராள்
நிலையாய்ந்து நெகிழ்ந்தாள், நெஞ்சம்!


கம்பத்தைச் சார்ந்து, காதல்
கணவனைக் கடைக்க ணித்து,
தம்பியின் சொற்கள் தாழ்ந்த
"தமிழர்தம் வரலா றாயின்,
நம்பிய எளியோர் வாழ்வை
நலிந்திடச் செய்த நாமே
அம்புவி தனிலே நேர்மை
அழித்தவ ரானோ மன்றோ?


நிந்திக்க நேர்ந்த இந்த
நெறிமுறை நினைவில் வைத்துச்
சிந்திக்க வேண்டும்; காலம்
சென்றஎம் செல்வத் தந்தை,
முந்திக்கைத் தீர்த்தம் வாங்கும்
முறைக்கென வழக்கில் மாட்டிப்
பந்தித்தெம் பாக்குத் தோப்பை
பறித்துக்கொண் டவனிப் பாவி!