பக்கம்:தமிழன், வெள்ளியங்காட்டான்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

25

நாலாறு தலைமு றைக்கும்
நலந்தரு முடைமை; நச்சு
வேலாகி நினைவில் நின்று
வேதனை மூட்டு தின்றும்!
தோலாகி எலும்பு மாகித்
துயருற எனது தம்பி,
மேலான மகள் நீ லாவின்
மேலதை யெழுதி வைத்தான்.


'பாசமாய்ப் பரிவாய்ப் பேசிப்
பலகாரச் சுவையை யூட்டி,
நேசனென் றெண்ணப் பண்ணி
நெஞ்சிலே வஞ்சம் வைத்து
மோசடி முழுதும் செய்தே
முன்னுக்கு வந்த கர்ணம்
நாசமாய்ப் போக!' வென்றே
நாடெலா மேசு "தென்றாள்.


போதுமுன் பொக்க னத்தைப்
புதிதாக்கி யவிழ்க்கா தே!இச்
சேதிநம் மணியய் யன்றன்
செவியிலே விழுந்தால், சேரப்
பாதத்தை யெடுத்திவ் வீட்டுப்
படிதாண்டி வைக்கார், பாரா!
சீதையின் கதையும் நம்மால்
செவிமடுக் காமல் போகும்!

நூல் நுழை வுற்றா ராய்ந்து
நுவல்வதை நோலோ மாயின்,
கோல்கொளத் தவறி விட்ட
கோனாரின் ஆடும் மாடும்,
கால்களால் மிதித்துக் காக்கும்
காடுபாழ்ப் படுத்தல் போல், நம்
பால்பழி படியத் தர்மம்
பாழ்பட நேரும் பாரில்!