பக்கம்:தமிழன், வெள்ளியங்காட்டான்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

26



கம்பனைப் புரிந்து கொண்டு
கதைகேட்கின் றாய்நீ யென்று
நம்பினேன் நானும்! நீயும்,
நரிக்குட்டி தன்வால் நாட்டி
உம்பர்கள் கடைந்த நல்ல
உவரியை அளந்த தொத்துன்
தம்பியைத் தலையில் தாங்கித்
தறிகெட்டுத் தவற்றைக் கண்டாய்!

'கண்மலி வள்ளத் துள்ளே
களிக்கும்தன் முகத்தைக் கண்டு,
விண்மதி மதுவி னாசை
வீழ்ந்ததென் றொருத்தி யுன்னி,
உண்மகிழ் துணைவ னோடும்
ஊடுநாள் வெம்மை நீங்கித்
தண்மதி யாகில், யானும்
தருவனிந் நறவெ'ன் றாளாம்!

அரிய இச் சித்தி ரத்தை
அருந்தமிழ் மொழியில் வைத்தோன்
பெரியவன்! இருந்தா லின்று,
'பேணுமென் கமுகந் தோப்புக்
குரியவன் இனிநீ' யென்றே
உதவலாம் உவந்து பாரா!
சரியெனச் சலனம். விட்டுச்
சதி,-யெனைச் சார்ந்தி" ரென்றான்.