பக்கம்:தமிழன், வெள்ளியங்காட்டான்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

28

கரிதப்பி விழுந்தால், மற்றோர்
கரியினுல் கடிதில் பற்றி
எருதொப்பப் பணியச் செய்தே
ஏவல்மேற் கொள்வ தொப்ப,
மருதப்பன் மாண்பைக் கொய்து
மண்ணிலே போட்டுத் தேய்க்க
ஒருதுப்பு வேண்டு மன்றோ
உலகத்தை ஊமை யாக்க!


வஞ்சகர் தம்மை யாரும்,
'வாருங்கள் வீட்டுக் கெ'ன்று
கெஞ்சவே வேண்டாம்; கிட்டக்
கேளிர்போல், கிளைஞ ரேபோல்,
அஞ்சிய அடியார் கள்போல்
அவர்களாய் வந்து சேர்வர்!
கொஞ்சநாள் கழிந்தால் வைப்பர்,
குரல்வளை தனில்தம் கையை!


வரப்போகப் பழகி, வந்து
வரதப்பன் வீட்டில் அய்யன்
இருப்பாக இருந்தான்; ஏற்ப
இதிகாசம் பருகச் செய்தான்.
உரப்பாக உலக வம்பும்
ஊர்வம்பும் அளந்தான்; ஊடே
சிரிப்பாகப் பேசிக் கேட்போர்
சிந்தையும் கவர்ந்தான், சேர!


"இலையில்லை, எங்கும் வாழை
இலைக்குமேல்! இறும்பூ தெய்த
மலையில்லை, மதிக்கும் மேரு
மலைக்குமேல்! மாண்பு மிக்க
கலையில்லை கம்பன் கண்ட
கலைக்குமேல்! கடைப்பி டிக்கும்
நிலையில்லை தெய்வ பக்தி
நிலைக்குமேல் நீணி லத்தே!