பக்கம்:தமிழன், வெள்ளியங்காட்டான்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

29

தேக்ககில், தேவ தாரு,
தித்திக்கும் மா,ப லாவாய்ப்
பூக்குலம் கமழும் பொங்கர்;
புள்மயில்,குயில்,பு றாக்கள்;
மாக்களில் பன்றி,புள்ளி
மான், முயல், மலைய ணில்கள்;
ஆக்கிய சுனை,நீ ரோடை
அழககம்! அருமைக் காட்சி!


வனமெனும் பெயரில், வாழ்வின்
வளமெலாம் வாய்த்த அங்கே,
மனமெனும் அதுவொன் றில்லா
மாதுதா டகை தன் மக்கள்,
இனமெனும் சிலரோ டின்புற்
றிருந்தனள், இதயத் திற்குள்
சினமெனும் இதுவே தங்கள்
செயல்மூல தன்மாய்ச் சேர்த்தே!


புடலங்காய் போலப் பொன்னுல்
பொருத்தமாய் வடத்தைப் பூண்டு,
கடகங்கள் வாழைத் தண்டின்
கனம்கையில் தொட்டுக் காதில்
குடமிள காய்ப்ப ழம்போல்
குருதிக்கல் கம்மல் மாட்டித்
திடலெனும் மூக்கில் தொங்கும்
தேங்காய்போல் புல்லாக் கொன்று!


ஈகையொன் றிரக்க மொன்றிவ்
விரண்டினைத் தவிர,ஏற்ற
போகத்துக் குரிய யாவும்
பொருந்தின போது மென்ன:
தேகத்தில் திடத்தைத் தேக்கத்
தினந்தோறும் கறியும் சோறும்:
தாகத்தைத் தணித்தல் கூடக்
தரமான மதுவி னாற்றான்!