பக்கம்:தமிழன், வெள்ளியங்காட்டான்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

30

 
அண்டையி லடங்கி வாழும்
அயலார்மே லவளே வம்புச்
சண்டைக்குச் சென்று பற்றிச்
சக்கையாய்ப் பிழிந்து வீசிக்
கண்டதைக் கூட்டி வாரிக்
கட்டிக்கொண் டோடும் கள்ள
முண்டைக்கு முடிவு காண
முனைந்தனன் விசுவா மித்ரன் !



பனியினைப் பளிங்காய்ப் பாரில்
பன்றியைப் பசுவாய்ப் பாகுக்
கனியினைக் காயாய்க் காணக்
கருதினால், காட்ட வல்லோன்.
தனியனாய் வனத்தில் தங்கித்
தவம்புரி கின்ற ஞான
முனிவனும் முயன்றால்,மாறாய்
முடியாத தெனவொன் றுண்டோ?


 
தந்திரம் தனிலே வல்ல
தரங்கெட்ட தாட கைக்குச்
சொந்தமென் றுள்ள அந்தச்
சோலையி லோரி டத்தை
ஐந்துபொன் குடக்கூ லிக்கென்
றமர்த்தியே, அரசன் மைந்தர்
மந்திரம் பயிலு மங்கோர்
மாலைப்போ தவளும் வந்தாள்.


"ஏடுகைக் கொண்டி ளிக்கும்
இவர்கள் யார்? இரண்டு திங்கள்
வாடகை பாக்கி வைத்தாய்;
வனத்தையும் அழித்தாய்; யானைக்
கோடுகைக் கொண்டுன் பல்லைக்
கொத்தாக உதிர்ப்பே" னென்றாள்
தாடகை; முனிதா ழாது
"தம்பீடேய் ராமா!" என்றான்.