பக்கம்:தமிழன், வெள்ளியங்காட்டான்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31

" சீரென்ப தில்லாள் சிவன்

சிந்திடச் செய்வ தொன்றே

நேரென்ப தறிந்தோ ரம்பால்

நெஞ்சினைத் துளைத்தான் ராமன்

பேரன்பி லாஅப் பெண்பேய்

பினமாகி வீழ்ந்தாள், அப்பா!

பாரின்ப முற்ற தன்றப்

பகவானின் பலத்தா" லென்ருன்.


கலையாட்டம் காணின், குந்திக்

களிப்புறக் கலந்து துய்த்துத்

தலையாட்டி யதைப்பா ராட்டல்

தக்கதே யெனினும் அய்யன்,

வலையாட்ட மாடல் கண்ட

வரதப்பன் வருந்தி, "இந்தக்

கொலையாட்டம் வேண்டா" மென்று

குறித்திது கூற லாளுன்:


"தீதினைச் செயினும் செப்பித்

திருந்தாம லிருப்பி னும்தான்,

'மாதினை வில்லைக் கொண்டு

மடித்தார்க னென்னும் மாற்றம்,

காதினைத் தீய்க்கு மன்றே

கருணையுள் ளோர்க்குக் கண்ட

மாதவன் மறந்தான் போலும்

மனுசியா யவளை மாற்ற!


வேதனைக் குரிய, - யாதும்

விவரித்தல் வேண்டாம்;வேறு

சாதியும், மதமும் பற்றிச்

சாற்றுது சங்க கால

நீதியும், நெறியும் காட்டும்

நிகரற்ற புறநா னூறுச்

சேதியை விளக்கிச் செப்பின்

செவிமடுத் திடுவே" னொன்றுன்