பக்கம்:தமிழன், வெள்ளியங்காட்டான்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32


'ஆவியா யண்ணன், ஆறு

ஆர்வமா யண்ணி, அன்புக்

காவலா யெண்ணித் தம்பி,

கடிநகர் நீங்கும் காட்சி,

ஒவியம் அப்பா!எந்த

உலகிலும் ஒப்பொன் றில்லாக்

காவியம் கண்ட கம்பன்

கவிச்சக்ர வர்த்தி காணுய்!


உள்ளத்தில் கொள்ளத் தெய்வ

உணர்வுறு வொருகா லத்து

வள்ளல்கள், வறிஞர் வாழ்வு

வரலாறே புறநா னுாறு:

பள்ளியில் பிள்ளை கட்குப்

பாடமாய்க் கூட வைக்கார்;

தள்ளுக குப்பை,- தப்பத்

தயங்கிடா தென்றுன், அய்யன்.


"தரமான வாழ்வு காணத்

தனையர்க்குத் தமிழ்த்தாய் தந்த

வருமானம்; வணங்கி வாழார்

வரலாறு! வரலா றென்னும்

உரமான துாட்டா மற்றுன்

உயர்ந்தவர் தாழ்ந்தா' ரென்று

தெருமான முழங்கு கின்ருர்,

தெரிந்தவர் தினமிங் கென்ருன் ,


சாற்றிய மொழிக்கு மாற்றுய்ச்

சாற்றிடும் சமர்த்தி ருந்தும்,

ஏற்றிய விளக்கும் பற்றி

எரியாம லிருப்ப தெண்ணி,

'நேற்றைய நிலையி னின்றும்

நீங்கின னிவனு மென்று

தோற்றிய நிலையி லய்யன்

தொடர்ந்தசொல் மாற்றிச் சொன்னன்: