பக்கம்:தமிழன், வெள்ளியங்காட்டான்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33


"ஏருண்டு வயலில்,ஆனுல்

இணைத்துழ எருதே இல்லை!

நீருண்டு கிணற்றில், ஆனுல்,

நீளமாய்க் கயிறே இல்லை!

மோருண்டு வீட்டில்; ஆனுல்,

முகந்திவா ரில்லை’ என்னும்

பேருண்டிவ் வூருக் கானுல்,

பெயர்மட்டும் திருவூ ரென்றே.



'நாவாத்தா ளய்ய னுக்கு

நன்ருய்த்தான் வாய்த்தா'ளென்று

தேவாத்தாள் சிரித்தாள்; தேரித்

தெளிவித்தான் வரதப் பன்; பின்,

பூவாத்தாள் போந்து தந்த

புதுமோரைப் பருகிப் போனுன் ,

காவாத்தாள் மடியில் சாய்ந்து

கண்துஞ்சும் கருத்தும் றய்யன்.