பக்கம்:தமிழன், வெள்ளியங்காட்டான்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

7 கண்னன் கற்பித்தல்

பனியிருள் பதுங்கப் பாரில்
பருதியும் பகலைப் பண்ணக்
'கனியருள் தருவை நாடும்
கவின் கிளி குயில்க' ளென்ன,
மனவிருள் மடிய, மாண்பு
மகள், மக னென்போர் மாறுத்
தனியருள் புரியுங் கண்ணன்
தவமனை தனைச்சார்ந் தார்கள்.

'குறும்பறக் கொடிய துன்பக்
குவையறு மெனவே கூறி,
அறம்பொரு ளின்ப வாழ்வை
அனைவரு முறவே பண்ணும்,
மறம்பெறு மனமும், மன்னும்
மதிபெறு மாண்பும், மானத்
திறம்பெறு தேசும் தேர்ந்து
தேக்கிட வேண்டு மென்றே.


வந்தவர் வழக்க மொட்டி
வணங்கியே வாழ்த்தப் பெற்றுத்
தொந்தர வின்றிக் குந்தத்
தும்பிவண் டுகளாய்க் கண்கள்
மந்திரச் செஞ்சொல் வல்லோன்
மலர்முக மதனில் மாந்தச்
சிந்தனை செய்து கண்னன்,
செந்தமிழ் அருந்தச் செய்தான்,



இருள்நிறைந் துள்ள வேளை
எழில்விளக் கிலங்கிற் றென்ன,
மருள்நிறைந் துள்ள மக்கள்
மனஇருள் மறையு மாருய்ப்
பொருள்நிறைந் துள்ள, புத்தம்
புதுநலன் புரியும் சொற்கள்,
அருள்நிறைந் தகத்தி னுள்ளே
அருவியாய்ப் பெருகிற் றன்றே.