பக்கம்:தமிழன், வெள்ளியங்காட்டான்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35

மலை"யெனப் பொய்கள் மன்ன

மதுவெனுஞ் சொல்லாய் மாற்றிக்

"கலை"யெனக் கவியாய்க் கட்டிக்

காவிய மெனப்பே ரிட்டே

"வலை"யென விரித்தார்: வாழ்வு

வசங்கெட, வறுமை வையத்

தலையென அலைக்க, மக்கள்

அறியாம லதில் வீழ்ந் தாழ்ந்தார்.


இளமானின் செம்பொன் மேனி

இலங்கெழி லிணைந்து காணக்

குளமீனும், அன்னப் பார்ப்பும்

குறிக்கொண்டு முந்த நீந்தும்

வளமான வையம் வாய்த்தும்

வாழ்வுவாய்க் காதோ ரானோம்;

ஒளிமானும் உண்மைக் கல்வி

உள்மான துட்கொள் ளாதே.


கற்கின்ற கல்வி வாழ்வில்

கடைப்பிடித் தொழுக வொன்றி

நிற்கின்ற கல்வி யின்றி,

நெறிமாறி நின்று நெஞ்சை

விற்கின்ற கல்வி, வேண்டா

விழல்கதை விளம்பும் வெற்றுச்

சொற்குன்ற மாகிச் சூழும்

சுகங்குன்றி மணியா யிற்று!


'அலைக்கோட்டில் துயில்செய் கின்ற

அரியினை, அயர்வ கற்றிச்

சிலைக்கோட்டு மகவாய்ச் சேர்த்துச்

செனித்திடச் செய்வ தற்காய்,

மலைக்கோட்டி லிருந்தோன்,

மங்கை மாரையே காணு மாண்புக் கலைக்கோட்டு முனி,கெள சல்யா

கருக்கொளும் கருமம் செய்தான்.