பக்கம்:தமிழன், வெள்ளியங்காட்டான்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

36

பாருக்குள் பக்தராய் நாம்
'பரம்பொரு ளென்றும் பன்ன,
நீருக்குள் ளிருந்து நீங்கி
நெருப்புக்குள் நிறைந்தய் யோதத!
ஊருக்குள் உதித்தான் ராமன்!
உத்தமி சீதை காட்டில்
ஏருக்குள் எழுந்தா' ளென்ருன்,
இயல்புக்கு மாருய்க் கம்பன்.

வெற்பினை யெடுத்தான் வீரன்.
வீசினன்; வீழ்ந்தி லிங்கை
அற்பர்க ளழிந்தா ரென்னும்
அளப்புக ளதிலே! மக்கள்
பொற்பினை வளர்க்க மற்றிப்
பொய்களே போது மென்று,
பற்பல பாட மாக்கிப்
படிப்பிக்கும் பள்ளிக் கூடம்!

'அரி"யென்று புகன்ரு லன்றே
அவலம்போம்! 'அழகுக் காவி,
சுரியொன்றி நீண்ட கூந்தல்
சுகுமாரி சீதை! யென்று
வரியொன்று படித்தால் வாழ்வில்
வறுமைபோம்' எனநம் நெஞ்சில்
திரியின்றி விளக்கை யேற்றும்
தெருப்பிர சங்கி மார்கள்,

'காக்கின்ற கடவுள், காக்கும்
காவலன் மகனயக் காட்டில்
போக்கொன்றிப் போன போது,
பொன்னிபோல் வந்த பெண்ணை
மூக்கன்றி முலையுங் கொய்து
முடுக்கின' னெனமொ ழிந்தால்,
'நோக்கொன்றுஞ் சுவர்க்கத் திற்கோர்
னுழைவுச்சீட் டாயிற் றென்பர்.