பக்கம்:தமிழன், வெள்ளியங்காட்டான்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

37



‘ புண்ணியக் கதைக’ ளென்ற்
புளுகினில் புலனைப் போக்கி,
மண்ணினி லுழைத்து வாழும்
மக்களின் மனத்தை மாய்க்கக்
'கண்ணியம், காசு, காணி,
காதல்,காப் பனைத்தும் காண
எண்ணிடின், ராம நாமம்
ஏற்றுவீ ரிதயத்’ தென்பர்.

குஞ்சுனும் இரையைக் கொண்டு
கொடுக்காத குருவி, குந்தி
மஞ்சுனும் மாத்தில் பூத்த
மலர்களை மசியக் கொத்தி,
அஞ்சுண வூட்டிக் குஞ்சை
அவஞ்செய்த தென்ன, மக்கள்
நெஞ்சுணும் நிலைக்கு நேரா
நெறிமுறை செய்தான், கம்பன்!

முருடராய் முதலி ருந்தும்
முறைகெட்டு முயன்று மூடித்
திருடராய்த் திறமி ருந்தும்
தேவைக்கு மிஞ்சித் தேடிக்
குருடராய்க் கண்ணி ருந்தும்
கோட்பாடு கண்டு கொள்ளாப்
புருடராய்ப் பொய்யைப் போற்றிப்
பொன்றுவார், புகழில் லாதே!

அத்தானை யொத்தார், யாதும்
அறியாதா ராகி அய்யர்க்
கொத்தாரா யொழுகி ஊரில்
உடையாரா யுவந்து வாழ்ந்து,
வித்தாரப் பொய்கட் குத்தம்
வேளையும் விளைவும் நல்கும்
பித்தேறிப் பிழையோ ராது
பெரியோராய்ப் பிழைத்தற் கென்றே,