பக்கம்:தமிழன், வெள்ளியங்காட்டான்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

‘தேவனே நிபுண னுகத்

திருப்பதி மலையைத் தேர்ந்து

கோவில்கொண் டுளன்நாம் கூடிக்

கும்பிடற் கென்றே! கொண்ட

பாவத்தைப் பற்றி யார்க்கும்

பயம்வேண்டாம் பணமொன் றுண்டேல்;

கேவலம், பழி,பொய், கீழ்மைக்

கேடெலாம் நீக்கற்’ கென்பர்.


கோழிவாய்க் குரல்கொ டாமுன்

குடிலின்வாய் நீத்தேர் பூட்டி

மேழிவாய்க் கைவைப் போரே

மிடிமைவாய்ப் படுவோ ரானுர்!

நாழிவாய்க் கைவைப் போரோ

நடுமைவாய்க் காது நாளும்

தாழிவாய்ப் பெய்தும் தாழாத்

தனம்வாய்த்துத் தனிக ரானுர்,


பிடித்திடப் பிடிப்பில் லாதே,

பேணிடும் பெண்டு பிள்ளை

உடுத்திட உடையில் லாதே,

உழைக்கினும் கஞ்சி காய்ச்சிக்

குடித்திடக் குடிலில் லாதே,

கூர்ந்தநல் லறிவி ருந்தும்

படித்திடப் படிப்பில் லாதே

பலகோடி மக்கள் பாரில்!


சத்தம், போர், அழுகை, நோய்கள்,

சாக்காடு,- சாப்பா டின்றி

மொத்தம்பேர் தொண்ணூற் றுக்கும்

முப்போதும் குச்சு வீட்டில்!

‘சித்தம்பார்; சிவம்பார்! செப்பின்

சிரமமே யின்றிச் சேர்த்த

சொத்தும்பார்! சுகம்பார்!’ என்போர்

சொச்சம்பேர் மச்சு வீட்டில்!