பக்கம்:தமிழன், வெள்ளியங்காட்டான்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39

அமுதாய தமிழின் தேய்வு ஆரியம் கூட்ட லாலே! சமுதாயத் தேய்வு சார்ந்த சமத்துவம் கழித்த லாலே! நமதாய நாட்டின் தேய்வு நச்சுநூல் பெருக்க லாலே! உமிதேய்வு அரிசி யாய்,நெல் உயிர்ப்பறல் வகுத்த லாலே.

பாரியின் பைந்த மிழ்பேர் பக்தவச் சலனுய்ப் பண்ணிக் காரியின் கனித்த மிழ்பேர் காமரா சாக்கிக் காட்டி, ஓரியின் ஒண்த மிழ்பேர் உருத்திர னெனவே ஓதிச் சேரியின் செந்த மிழ்பேர்ச் செங்கனைத் தெருவில் சேர்த்தார்.


தாய்செலும் தடத்தில் கன்றும் தடையின்றி நடப்ப தொப்ப, ஆய்அர்த்த நாரி யாகி, அதிகமான் அரங்க னுகிச் சேய்பால சுப்ர மண்யம், செங்கோடன் வெங்க டேசாய்ப் போய்த்தமிழ் புலமை போகப்

புகுத்தினுர், புராணப் பொய்யை!


மதிமாற்றப் பட்ட மக்கள்

மறப்பண்பு மறக்கு மாறுய்

விதிமாற்றி, விருப்பம் மாற்றி,

வெவ்வேறு சாதி மாற்றிக்

கதிமாற்றி, மேல்கீ ழென்று

கைகூப்பி வணங்கச் செய்தார்;

நிதிமாற்ற | மில்லா ரெல்லாம்

நேர், நிறை குடிக ளானுர்!