பக்கம்:தமிழன், வெள்ளியங்காட்டான்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

41



‘ஒப்புர வென்னுஞ் சொல்தான்
உலகுக்கோர் தெய்வ’ மென்றே
அப்பராழ் வார்கள் செப்பற்
கறியாராய்ப் போன தாலே,
செப்பரும் விதமாய் மக்கள்
சீர்கெட்டுச் சிறுமைப் பட்டுத்
தப்புகள் பெருகி நாடே
தாறுமா ராயிற் றின்று!

இச்சொல்லி னியல்பை யாய்ந்திங்
கிருப்பவர் செயல்ப டுத்தின்,
குச்சில்லை மச்சல் லாமல்;
‘கொடுமையே’ யென்னக் கொல்லும்
நச்சில்லை அமிழ்தல் லாமல்;
நானிலத் திருப்போர் தம்மில்
எச்சில்லை தாழ்வில் லாமல்
இனிக்குமெல் லார்க்கும் வாழ்வே.

புலன்களைப் பழமை யின்கண்
புகுத்திநன் காய்ந்தோர் சொல்வர்:
குலங்கோத்தி ரங்கள், கோயில்,
குரு,பக்திக் கூத்தெல் லாம்நம்
நலன்களுக் கெதிராய், நாச
நடைமுறை வழக்காய், வாழ்வில்
விலங்குக ளாயிற் றின்று
விஞ்ஞான நெறிகட் கென்றே

குடியாது? கொள்கை யாது?
கோன்முறை- யதுயா தென்று
படியாது, _ பயனை யாய்ந்து
பாராது, பண்ப டாது,
‘முடியாது விடநம் மாலே
மூடத்த னம்தா’ னென்றால்,
விடியாது பொழுது: வாழ்வில்
வேதனை ,-- யிதுதீ ராதே!