பக்கம்:தமிழன், வெள்ளியங்காட்டான்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

42


உழைப்பவர் பலராய், ஒன்றி
உழைக்காம லோங்கி யுண்டு
பிழைப்பவர் சிலராய் நாட்டில்
பிழைபடப் பேணு மாட்சி
அழிப்பவ ராகோ மாயின்
அவனியிற் பிறந்தும் வாழ்வை
இழப்பவ ராவோ மென்ப
தெடுத்துமக் கியம்பு கின்றேன்.

காடுநம் முடைமை; காட்டைக்
கைப்படக் கடிந்து கண்ட
நாடுநம் முடைமை; நாட்டில்
நலமுற நாளும் பட்ட
பாடுநம் முடைமை; பாட்டின்
பயனெலாம் பதுங்கி யுள்ள
வீடுநம் முடைமை யன்றி
வீணர்தம் முடைமை யாமோ?

துதிபோது மென்னுர் நம்மைத்
துச்சமாய்த் தூற்றி னுலும்,
நிதிபோது மென்னுர் நேரில்
நெற்றிக்கண் காட்டி னுலும்,
மதிபோது மென்னு மல்நாம்
மனத்திட்ப மெய்தி, மற்றிக்
கதிபோது மென்னுப் போரில்
கைகோத்து நிற்போ மின்றே.

மிகமிகக் கொடிய மேல்கீழ்
மிரட்டலி லிருந்து மீளல்,
அகமிக மலர்த்த லான
அரசிய லமைத்துக் கொள்ளல்,
சுகமிக, உழைக்கும் சொத்துச்
சுதந்திரம் பொதுமை யாக்கல்
தகுமிக வெனவே, தர்க்கத்
தமுக்கடித் துரைக்கின் றேன்நான்!