பக்கம்:தமிழன், வெள்ளியங்காட்டான்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

44



8 அப்பாவும் மகளும்

பாகொன்றும் மொழியாள்; பாவின்
பயனென்றும் வழியாள்; பற்றி
வேகின்ற வெயிலில் வேர்க்க
வீடுசேர்ந் ததுபார்த் தய்யன்,
“போகின்றாய், வருகின் றுயுன்
பொன்முகப் பொலிவு குன்றின்
நோகின்ற தன்றே வொன்றி
நோற்றுனைப் பெற்ற நெஞ்சம்!

இழுக்குக்கிங் கிடமா யென்னை
எதிர்க்கிறுய்; இரங்கிக் கேட்டால்,
‘கிழக்குக்கு மேற்கு மெத்தக்
கேடுசெய் கிற’தென் கின்றுய்;
‘உழக்குக்கிங் காழாக் கொப்பி
உதவிட விலையென் கின்றாய்!
வழக்குக்கு மாறு யின்றும்
வழங்கவொன் றிலையா?” என்றுன்.

“அப்பாவென் றுலப் பாதான்;
அகிலத்தின் மீதப் பாவுக்
கொப்பாக உரைக்கக் கூட
ஒருவரு மிருக்கா ரோர்ந்தால்,
தப்பேதும் செய்யார் நெஞ்சில்
தந்திரம் தளிர்க்கா தப்பா!
எப்போதும் சொன்னேன்; சொன்னேன்,
இப்போதும் தப்பா” தென்றுள்.

அகந்துளி அனுங்கிற் றந்த
ஆற்றுல்சா லுரையால்; அப்பா
முகந்துளி முரணிற் றுற்ற
மூப்பினுல்; மொழுக்கு மேனி
சுகந்துளி சுருங்கி னுற்போல்
சோர்ந்தவ ராகிச் சொன்னார்:
“சகந்துளி புரிந்து கொள்ளும்
சமர்த்தற்ற பெண்நீ!” யென்றே.