பக்கம்:தமிழன், வெள்ளியங்காட்டான்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

45


“கண்ணனைக் கண்டு காத்துக்
கவின்தமிழ் கற்கின் நீரும்,
அண்ணனை அருமைத் தம்பி
அடைந்தவா றுண்மை மேவிப்
பண்ணினி லமைத்த வாழ்வுப்
பாடலாய்ப் பரிண மித்து
மண்ணினில் மதிக்கும் முல்லை
மலராகி மணப்பீ” ரென்றுள்.

“பாரதம், கீதை,-- பார்த்துப்
பரக்கநான் படித்தேன்; பார்த்த
சாரதி அய்யங் கார்பால்
சங்கநூல் கற்றேன்; சாற்றின்,
யாரிது மறுப்போர்! அக்கா,
அல்வாவைச் செய்து, காரம்
பூரிபோட் டுள்ளாள்! போய்நீ
புசித்துவா பொன்னே!” யென்றான்.

“சுருங்காது குறளைக் கற்றுச்
சுயமாக ஆய்ந்தோ ரெல்லாம்
வருங்கால ஒளியா யொன்றி
வையத்தில் வாழ்வா ரப்பா!
பெருங்காய மிட்டி ருந்தால்,
பெட்டியே மணக்கும்! நீங்கள்
ஒருங்காக அல்வா, பூரிக்
கோட்டினீர் வாழ்வை” யென்றாள்.

மெழுகிக்கொண் டிருந்த சீதா
மிரட்சியாய்த் திரும்பிப் பார்த்து,
“கழகத்துக் கனுப்பி வீட்டுக்
கதைகெடச் செய்தீ ரப்பா!
பழகவே இயலா வாறுய்ப்
பணிவுபாங் கற்றுப் பைய
அழுகிய கிழங்காய் நம்மை
அருவருப் புறச்செய் கின்றுள்.