பக்கம்:தமிழன், வெள்ளியங்காட்டான்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

46


வேலியை நெறித்துச் சென்று
விருப்பமாய்ப் பயிரை மேயும்
காலியைக் கட்டி வைத்தல்
காசினி வழக்கா றப்பா!
‘தாலியைத் தரித்துக் கொள்ளத்
தரமாட்டேன் கழுத்தை' யென்னும்
நீலியை விட்டால் என்ன
நேருமென் றறியீர் நீரும்!

‘அவல்குன்றை நனைய விட்டால்
அவலமே மிஞ்சு’ மென்று
நவில்கின்றேன் நானும்; நீங்கள்
நன்குயோ சித்துச் சற்றும்
கவல்கின்றீ ரில்லை! சுட்டிக்
காட்டினும் காணீர்! நாளைச்
சுவல்குன்ற மானக் கேட்டைச்
சுமக்கவே நேரு” மென்றுள்.

“படிப்புண்ட தில்லை யேனும்,
பாங்காக உனக்கு வீட்டில்
அடுப்புண்டு சமைக்க! அப்பா,
அயராது தேடி வைக்கும்
முடிப்புண்டு செலவு செய்ய!
முகம்முறிந் திடுமா றேசத்
தடிப்புண்டு நாக்கில்! வேறு
தடையுண்டோ ?” என்றுள், நீலா.

“குதிரானுன், தின்று நன்றுய்க்
கொழுப்பேறி உடலெல் லாம்;கூர்ங்
கதிரானுள், கேட்பார் காது
கறுகிடத் துளைக்குஞ் சொல்லால்!
எதிரானுள், நமது தேச
இனமத இயல்புக் கப்பா!
புதிரானுள் நீலா இன்று
போகின்ற போக்கி” லென்றுள்,