பக்கம்:தமிழன், வெள்ளியங்காட்டான்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

47


“மேலாவேன், இவற்றே டின்னும்;
மீதியைக் கேட்டுக் கொள்நீ!
ஆலாவேன், வியர்த்து மேனி
அடிசுட வருவோர்க் காவின்
பாலாவேன், பாடு பட்டுப்
பசித்தவர் பருகிப் போகக்
கோலாவேன், உன்போற் கோணிக்
குறுக்கிடும் கொடியோர்க்” கென்றுள்.

சொத்துடன் சுகத்தில் சொக்கும்
சுயநல அப்பா சொன்னுர்:
“ஒத்துடன் படவுன் தங்கைக்
குளமொப்பா துணர்ந்து பேச்சை
இத்துடன் நிறுத்து சீதா!”
என்னவும், இலங்கா நின்ற
முத்துடன் பவளச் செப்பாய்
முறுவலித் தகன்றுள், நீலா!

வானீன்ற மதியாய் வார்த்து
வையத்தை வழங்கச் செய்யும்
தேனீன்ற தமிழைக் கற்றுத்
தெளிந்தவள்; தியாக மில்லாத்
தானீன்ற தருணி யேனும்,
தக்கதன் றென்றுல் தாக்கும்
ஊனூன்று முரைகட் கஞ்சி
உளந்திறந் துரைத்தா னய்யன்!

“படிப்பதுண் டெனினும் நீயோர்
பார்ப்பனி; பலரும் பார்க்க
நடுப்பகல் பொழுதில் நாளும்
நம்மகத் துணிவு கொண்டு
கொடுப்பது கூடா’ தென்றேன்.
‘குடிகளைக் கெடுக்கு முங்கள்
நடப்பதில் முளைத்த பாவம்
நான்களை கின்றே’ னென்றுள்.