பக்கம்:தமிழன், வெள்ளியங்காட்டான்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

48


‘பகையென்றும், பாவ மென்றும்
பாராமல் பணத்தைத் தேடித்
தொகையொன்று சேர்த்தா லன்றித்
துலங்காது சுகவாழ்’ வென்றேன்;
முகையொன்றி முகிழ்த்த முல்லை
முறுவல்போய், முகில்மோ தல்போல்
நகையொன்றி, ‘அதுதான் குள்ள
நரிப்பிழைப் பப்பா!’ என்றாள்.

‘தாயினும் சிறந்த தாய்இத்
தனம்நம திளமைக் கீன்ற
சேயினும் சிறந்த சேய்இச்
செல்வம்நம் முதுமைக்’ கென்றேன்;
ஆயினும், துளியுங் கூட
அயராம லந்தோ அப்பா !
பேயினும் பெரும்பே யானீர்
பேராசை தனில்நீ’ ரென்றாள் .
 
‘கல்லாதா ரில்லை யிந்தக்
காசினி மீதென் றாயின்,
பொல்லாத தெய்வப் பொய்கள்,
பொருள்,மத பேத மெல்லாம்
செல்லாத தாகும்! சேரச்
செப்பஞ்செய் தமைத்துச் செல்வ
மில்லாதா ரில்லை’ யென்ன
இயங்கிடும் நாடென் கின்றுள்.

நிரப்புக்கு நேர்ந்தோன் நிற்கும்
நிலையில்நான்; நிமிர்ந்து நின்று
வரப்புக்கு மிஞ்சி வார்க்கும்
வள்ளல்நீ லாவா யுள்ளாள்!
எரிப்புக்க வைத்தூ றுக்கற்
கெண்ணுதே யெனைநீ! ஏசச்
சிரிப்புக்குள் ளாதல் நேரும்
சீரழிநீ” தென்றான், அப்பா!