பக்கம்:தமிழன், வெள்ளியங்காட்டான்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49


நீலியின் நிலையை அப்பா நெஞ்சுநொந் தியம்பக் கேட்டு, 'வேலியி லிருந்தோ ணானை விருப்பமாய் விரைந்தெ டுத்துச் சேலையில் மறைத்து வைத்த செய்தியா' யெண்ணிச் சீதா, பாலையில் கட்டப் பட்ட பசுவெனப் பதைத்தாள், பாவம்!

எப்போது மில்லா தின்றிங் கெல்லாமும் எறு மாறாய்த் தப்பாதுற் றுள்ள தென்றே தன்னுளந் தெளிந்தும், தாங்கும் அப்பாவி னியல்பா லொன்றும் அவத்தையென் றறிந்தும், யாதும் செப்பாது சீதா நின்று சிந்தினாள் கண்ணீர் அன்றே.