பக்கம்:தமிழன், வெள்ளியங்காட்டான்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

9 மணியய்யன் மாயவலை

"சிங்கங்க ளெல்லாம் காட்டில் செத்தொழிந் திட்ட தென்று கங்குலில் முயல்,மான், பன்றி களிப்புற்றுத் துள்ளிற் றென்னச் சங்கமொன் றமைத்துச் செய்திச் சஞ்சிகை கற்போ ரால்தான் இங்கிதம் மங்கிற் றூரில் எனஎண்ணி னான்சின் னய்யன்.

ஓங்கிய வேத கோசம் ஒலிக்காத குறையீ தொன்று: ஆங்கிலக் கல்வி நாட்டில் அனைவரும் பயில்வ தொன்று! நீங்கிய தச்சம்; நேராய் நிமிர்ந்துநிற் கின்றார்; என்றும் தூங்கினோர் விழித்தார்ப் போன்றோர் தோற்றமும் தோன்றிற் றன்றே!

தற்பர ஞானந் தன்னைத் தளராது விதைத்துத் தானே பற்பல பழிகள் பாங்காய்ப் பாரினில் விளைவிக் கின்ற, விற்பனச் சின்ன அய்யன் விரைந்துவந் தங்கே சுந்தன் நிற்பது கண்டு, வாடா, நேசா!சற் றிங்கே, யென்றான்,

தந்தையும் தவறி, பெற்ற தாய்,தங்கை, தம்பிக் காகச் சிந்தனை செய்யா தய்யன் சேவக னாகிச் சுந்தன், நிந்தனை நேரா தெந்த நேரமும் வேலை செய்வான், சந்தனப் பொட்டும், பாட்டின் சந்தமும் தவிர்க்கா தோனாய்!