பக்கம்:தமிழன், வெள்ளியங்காட்டான்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51


பற்றிலாப் பழையர் பாரில் பலராகப் பணத்தைப் பண்ணக் கற்றவர் சிலரே யாகக் கடுந்துயர்க் கடலில் மூழ்கப் பெற்றவர், பெற்ற பிள்ளை பெரியவ னான பின்பும் மற்றவர்க் கடிமை யாக்க மறுக்கின்மண் மறுக்கு மன்றோ?

கொட்டிலைக் கூட்டிக் குட்டிக் குதிரையைத் தேய்த்துக் கொள்ளைக் கட்டுவான்; கன்றைக் காட்டிக் கறந்துபால் தருவான்; கொல்லை ஒட்டுமாஞ் செடிகட் கொட்ட ஊற்றுவான் தண்ணீர் சேந்தி! வட்டமாய் மாட்டுச் சாணம் வறட்டியாய்த் தட்டி வைப்பான்.

துண்டினைத் தலைக்குச் சுற்றித் துடையள விறுக்கி வேட்டி, வண்டியைப் பூட்டிக் குந்தி வலக்கையால் சொடுக்கின் சாட்டை, "சண்டியிஃ தெ'ன்னுங் காளை "சக்கரம் கழன்ற தென்று கண்டவர் கத்து மாறு காற்றாகப் பறக்கச் செய்வான்.

படிக்காத படியாய் விட்டுப் பணியாது வளர்ந்த சுந்தன் நடிக்காத நடிகன்; நல்ல நகைச்சுவை யாளன்; நாளும் கடிக்காத படியாய் வாசல் காப்பவன் றனைஅய் யன்தன் அடுக்காத தடித்த னத்திற் காளாக்க அடியைப் போட்டான்.