பக்கம்:தமிழன், வெள்ளியங்காட்டான்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

"எதுவேனு மிருக்கா? சீதா! இடைப்பகற்" கெனச்சின் னய்யன், முதுவேனிற் பருவம் முத்தாய் முகத்தினை வியர்த்து மூட, "மதிவான வெளியை மாற்றி மனைபுக்க தென, அம் மங்கை இதவான இனிப்பு, காரம் ஏற்குமா றேந்திப் பூந்தாள்.

அறத்திற்கு மாக்க மாகா: அறிவுக்கும் அடுப்ப தாகாப் புறத்திற்கும் பொருத்த மாகா,__ பொத்தலாய்ப் பொடிந்து போன முறத்திற்குச் சாணி பூச முயல்பவர் போன்று - மூடன், ஒறுத்தற்கின் ருவா னென்றே உறுதுணை யாக்கற் குற்ருன் .

"இவையாக மொத்தம் சுந்தன் இன்றுதின் பதற்கீ' யென்னச் சுவையாக நெய்யைக் கூட்டிச் சுட்டதேன் குழலும் சொக்க, நவையேகத் தாளித் திட்ட நறுமணத் துவைய லப்பம் குவையாகச் சுந்தன் தட்டில் கொட்டிவிட் டகன்ருள் கோதை!

‘கருங்காலிக் கட்டை' யென்று கருதவே வளர்ந்தும், கற்று வருங்கால அறிவு வாய்க்கா வாலிபன், வயிறு வாழ்த்த ஒருங்காகத் தின்று தீர்க்க உட்கார்ந்த வுடனே, ஒர்ந்து மருங்காக வந்து நின்று மணியய்யன் மலர்ந்தான் வாயும்!