பக்கம்:தமிழன், வெள்ளியங்காட்டான்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54


"தாயுள்ளாள்; தந்தை யுள்ளான்; தமருள்ளா ரெனினும், தள்ளா வாயுள்ள பிள்ளை தானே வாழ்ந்திடும்! வாழ்வு காண, நீயுள்ளாய்; நானு முள்ளேன்! நினைத்ததைச் சாதிப் போன்நான்; காயுள்ள மரத்துக் குத்தான் காப்பு,கெள ரவம்கா" ணென்ருன்.

பண்ணேசை பருகி னன்போல் பரவசப் பட்ட சுந்தன், "பெண்ணுசை யறவே விட்ட பெரியவ ரிருப்பார்; பேசின் மண்ணுசை விட்டா ரில்லை; மகிழ்கிறேன்! மதித்து, மற்றவ் விண்ணிச' னெனவே உம்மை வேண்டிநான் துதிப்பே" னென்ருன்.

"நீரிலே நீந்தும் மீன்போல் நிலத்திலே நீந்து வோன்நான்! 'சேரியில், சுந்தன் மட்டும் செல்வ' னென் றேத்திச் செப்பும் பேரையும் பெறுவாய்! யாதும் பெரியதன் றெனினும், நீயென் காரியம் முடித்தால், நானுன் கருத்தினை முடிப்பே" னென்ருன்.

'விதிமட்டு மிருந்தால், நீங்கள் விரும்பிடும் விதமா யென்னை, 'இதுமட்டும் செய்’யென் றேவின் 'இயலாதெ'ன் றியம்பா தென்வாய்! 'அதுமட்டு முண்மை' யென்றே அறிவித்தான் சுந்தன்; ஆசை மதுமட்டும் குடித்து விட்டு மயங்கினேன் மகிழ்தல் போன்றே.