பக்கம்:தமிழன், வெள்ளியங்காட்டான்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

மாலாவும் நீலாவும்

சேறின்றி, மணலா யொன்றிச் சிறுபெருங் கற்க ளொன்றிக் கூறின்றிக் குழிமே டாகிக் கோணல்நேர் கொண்ட தேனும், ஆறென்றா லாறே! ஆகா! ஆற்றுக்கு நிகரா றன்றி வேறொன்று கூற வுண்டேல் விளம்படி யென்றாள், நீலா.

வில்லொன்று வேலொன் றென்ன விளங்கிடும் புருவம் கண்ணோ டல்லொன்று கூந்தல் நீலா ஆவலாய் வினவக் கேட்டும், ' நில் லென்று சொன்னால் கூட நிற்காது செலுமவ் வாற்றின் கல்லொன்றி நின்ற மாலா கருத்தொன்று காணச் சொன்னாள் :

மூத்துக்கொண் டிருந்த மோன முழுமதி முகிழ்த்து மோகக் கூத்துக்கொண் டிருந்து மிந்தக் குமுதமேன் கூம்பிற் றன்று? பூத்துக்கொண் டிருந்த பூவாப் புலன் கவர் புத்தேள் புல்லக் காத்துக்கொண் டிருந்து மிந்தக் கமலமேன் கவிந்த தின்று?

நேருக்கு நேராய் நீண்டு நிழல்தரு மரங்கள் நேர்ந்திவ் வூருக்கோ ருடைமை யாகி உதவிட வுள்ள, வூறா எரிக்கும் இதயத் தேக்கம் இருக்குமா மிணைந்து வாழ்வில் நீருக்கு நெஞ்சீந் தன்றி | நிலைபெறா தின்ப" மென்றே.