பக்கம்:தமிழன், வெள்ளியங்காட்டான்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57


  • காலையி லரும்பிப் போதாய்க் கடும்பகல் கழியக் காத்து, மாலையில் மலரும் நல்ல

மல்லிகை மகிழ்ச்சி மன்னாப் பாலையைப் பயிலும் வண்டைப் பதியாக வரித்துப் பாங்கி, - சோலையின் மணத்தைத் தூதாய்ச் சுகம்விழைந் தேவிற்’ றென்பர்.

வேளாக விளைந்தா ருன்னை வெகுவாக விரும்பி வேட்டுக் கேளாக வேண்டிக் கேட்டால் கிளையாக வேண்டா மோநீ! நாளாகி, வாய்த்த பெண்மை நலங்குன்ற நேரின், மூப்புக் காளாக வேண்டி நேரு மல்லவோ?"என்றாள்,மாலா.

ஏலாத தெதுவும் கூறி இதயத்தை நோகச் செய்யா மாலாவின் மதுர வாக்கு மகிழ்ச்சியா யிருந்த தேனும், நீலாவின் நிலைக்கு முற்றும் நேர்முரண் படவே , நெற்றி மேலாகப் புருவம் கோணி மிருதுவாய் மிழற்ற லானாள்:

"சீராய்ந்து, செல்வ மாய்ந்து, செல்வியர் திறனும் மாய்ந்து, பாராய்ந்து கொண்ட பண்டைப் பழக்கத்தைப் பகர்ந்தாய் மாலா! நேராய்ந்து, நினைவை யாய்ந்து, நிறை, நெறி யாய்ந்து, நேரில் ஆராய்ந்து கொள்ளும் காலத் தாராயா திவ்வா’ றென்றாள்.