பக்கம்:தமிழன், வெள்ளியங்காட்டான்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

 சுடர்கின்ற மணி நீ! உன்றன் சுகம்நாடிச் சொன்னேன்: சோக இடர்குன்ற இருந்து பெண்மை இன்பத்தை எய்த எண்ணின், 'படர்கின்ற பருவம் வாய்த்த பைங்கொடி பற்றி வாழ்வைத் தொடர்கின்ற கொளுக்கொம் பொன்றின் துணையின்றி யமையா தென்றே?

அச்சிலே வார்த்தெ டுத்த அழகிய அடலே றென்ன, மச்சுவீட் டய்யர் பிள்ளை, மனங்காண வந்துன் வீட்டில், சொச்சியும் பச்சி யும்தான் சுவைக்கின்ற பொழுதே, சூடாய் "நிச்சயம் வரனெ னக்கு நேரில்லை யென்றா யன்றும்!

சொல்லோர்ந்த மகளிர் சொக்கிச் *சுகுமார னெனவே சொல்லப் பில்லூரி லிருந்து வந்தான், பிள்ளையாண் டானும் பீ.ஈ ! எல்லார்க்கு மிதய மேங்க, எள்ளள வெண்ணா மல், நீ 'ஒல்லாதித் திரும ணத்துக் குடன்படே” னென்றா யின்றும்!

வானிலா,கை, கால், வாய், கண், வடிவான உடலும் வாய்த்து "மானிலத் துனக்குத் தக்க மாப்பிள்ளை யெனவே வந்தும், தேனிலே சொல்கு ழைத்துத் தித்திக்கச் சரியென் னாமல் பூநலந் தவிர்த்தாய்; புத்தி புறம்வைத்தாய் பொறுப்போ ராதே!