பக்கம்:தமிழன், வெள்ளியங்காட்டான்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59


பித்தாகிப் பிதற்றத் தந்தை, பிறந்தவள் முகத்தில் பின் னும் பத்தேனக் கரிப டிந்த பான்மையாய்ப் பதைக்கச் சொந்த அத்தானும் ஆவ தோரா தயர்ந்திட, அலைக்கு முன்றன் உத்தேச மின்ன தென்றின் றுரையடி யென்றாள், மாலா!

இனங்கண்டு மணத்தல்: ஏமுற் றெழில்கண்டு மணத்தல்; ஏற்ற கனங்கண்டு மணத்தல்; கற்ற கலைகண்டு மணத்தல்: காக்குந் தனங்கண்டு மணத்தல் தாமும் தரங்கண்டு மணத்த லன்று! மனங்கண்டு மணத்தல் காமம்; மதிகண்டு மணத்தல் காதல்!

பாடெனின் பாடிக் காட்டிப் பரதநாட் டியமும் பண்ணோ டாடெனின், ஆடிக் காட்டி அடிதொடை அழகு காண ஓடெனின், ஓடிக் காட்டி உளமொட்டாற் குரிய ளாகி, மாடெனக் கிடப்ப தற்கென் மனமொப்ப வில்லை மாலா!

விதியிலா நிலையில், வேட்கை விருப்பிலா நிலையில், வேண்டும் நிதியிலா நிலையில், பெண்ணோர் நீசனை மணக்க நேர்ந்து, மதியிலா மகப்பே றெய்தி மாண்பிழப் பதினும், மற்றிந் நதியிலே வீழ்ந்தி றந்தால் நலமுறும் நமது நாடே!