பக்கம்:தமிழன், வெள்ளியங்காட்டான்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60


பண்பாடு படியா ஆண்கள் பணப்பாடு படிப்போ ராகிப் பெண்பாடு பிணிப்பா டாகிப் பிள்ளைகள் பிழைப்பா டாகி, உண்பாடும் உடலின் பாடும் ஓய்ந்தநள் ளிரவில் கூடக் கண்பாடு காணா தின்றிக் காசினி கலங்கு தன்றோ?

"ஆடவன், ஆற்றல் வாய்ந்த அறிஞனெங் கிருக்கின் றானே - நாடிடின் அதுஞா லத்தில் நல்லிடம் எனவே நாட்டி, ஈடிலா இன்ப மீயும் இனியசெந் தமிழில், ஒளவை பாடியே வைத்தும், பார்த்துப் படித்த ஆண் யாரிப் பாரில்?

"மேதினி மேல்,பூப் போன்றோர் மெல்லிய ரெனவே மேவி, மாதரின் மனமும், மாண்பும் மற்றவர் மனமும் மல்கக் காதலைக் கண்டு காத்துக் கடிமணங் காணப் பேடிப் பேதைகள் படிக்கின் றார்கள் பெண்பார்க்கும் படலம் வந்தே!

ஒருநாள்நாம் வாழ்ந்த போதும் உளங்கொண்டா ளொருவ ளோடு, திருநாள்போ லெண்ணி நாளும் திளைக்கலாம்! தெளியான் தேரின், வருநாள்க ளெல்லாம் கண்ணீர் வடிக்கவே வந்து வாட்டும் கருநாள்க ளாகி வாழ்நாள் கழித்திடத் தீரும் மாலா!