பக்கம்:தமிழன், வெள்ளியங்காட்டான்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61

பொருள்திறம் புரிந்து, போற்றும் புகழ்திறம் புதுக்கிப் பொய்மை இருள்திறம் இல்லா தெற்றி, இல்லறத் திறமி ணைந்து, மருள்திறம் மாய்த்தோன் சூடும் மணமாலைக் குரிய ளாயின், அருள்திறம் அமைந்த வாழ்வாய் ஆனந்த முறலா மன்றே!

துறவிலே தூயோர் சொல்கைத் தொடியாயும் துலங்கும்; தோலா அறிவிலே ஆழ்ந்தோர் சொல்கா தணியாயும் அமையும்: அன்பாம் உறவிலே உரியோர் சொல் நம் * உடையாயும் உதவும்: உள்ளம் மறுவிலே மலிந்தோர் சொல்நம் மகிழ்ச்சியை மாய்க்கு ' மென்றாள் *.

"தந்தையுன் நலத்தை நாடத்
தவறினார் போன்றும், தாயாம் சொந்தவுன் தமக்கை யின்சொல் சுயநல முள்ள தென்றும்
நொந்தசெம் புண்ணில் கோலை நுழைத்ததாய் நுவலா தே:யுன் சிந்தையின் சிக்கல், குற்றம் செயுமிதைச் சீர்தூக் கென்றாள்".

'ஊன்றுளித் துளியாய்க் குன்றி உலரினும், உயிரைப் பேணத் தேன்றுளி யெனினும் மண்ணைத் தீண்டிய நீரில் வாயை
வான்றுளி யன்றி யென்றும்
வைக்காது வானம் பாடி!
நோன்றுளி யதுவாய் நானும்
நோற்பவ' ளென்றாள், நீலா.