பக்கம்:தமிழன், வெள்ளியங்காட்டான்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

சுகத்திலே உதித்தும், சோராச் சுயமான அறிவால் நீலா, முகத்திலே முறுவல் மேவ மொழிந்ததை மாலா கேட்"டுன் அகத்திலே அமர்ந்த அந்த ஆற்றல்சா லறிஞன் யாரிவ் வுகத்திலே அவனெங் குள்ளான்? உரையடீ உணர!” என்றாள்.

"ஊக்கத்தை உணவாய் ஓம்பி ஊட்டுவோன், உலர வுள்ளார் ஏக்கத்தை யெடுத்து வீசி எறிபவன், எளியோர்க் கென்றும் ஆக்கத்தை யறிந்து தேக்கற் கருள்பவன், அவன்தான் அல்லில் தூக்கத்தைத் தொலைத்தென் நெஞ்சைத் தொடவுள்ள தோன்ற" லென்றாள்.

"பெண்ணெனப் பிறந்து, பேதை, பெதும்பையும் கழிந்த பின்னிம் மண்ணினில் மாண்பு மிக்க மங்கையாய் மலர்ந்தால், மற்றிக் கண்ணனைக் கண்ணால் கண்டு, கருத்தினுள் வைக்கா தோர்யார்? எண்ணமொத் திணைந்து வாழ்நீ இனிதினி!" என்றாள், மாலா.