பக்கம்:தமிழன், வெள்ளியங்காட்டான்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

63


11 நேரத்தில் வந்த நீலா

கண்ணினைக் கவரும் காட்டுக்
கவின்மயில், களித்துக் காணத்
திண்ணையில் அமர்ந்து தீரத்
திருக்குறள் தேனைத் தேரும்
புண்ணியக் கண்ணின் வாழும்
புகழ்மனை பொலியப் புக்காள்:
எண்ணிய தொன்றை யன்றே
இதயத்தில் பதித்தற் கென்றே

கற்பிக்கும் கால மல்லர்க்
காலத்தில் காண வந்து,
சிற்பிக்குச் சிறப்புச் சேர்க்கச்
சீராகத் திகழும் மேனிப்
பொற்புக்குப் பொருந்தக் கண்ணன்
புலனுக்கு விருந்தா மாறவ்
விற்புக்கு நிற்பாட் கேற்ப
எதிர்புக்கு நின்றா னின்றே.

 “ புள்ளியில் லாமல் பூப்போல்
பொலிகின்ற மானோ? பூதக்
கள்ளமில் லாமல் வந்த
கண்ணிறை மணிப்பு றாவோ?
நள்ளிருள் நகர்த்தி, நாடு
நலம்பெற முகிழ்த்த நல்ல
வெள்ளிமீன் தானே? நீலா!
விடியநீ வந்தா ” யென்றான்.
 
"சுவையெலாம் சொக்கச் சொட்டச்
சுந்திரச் சொற்கள் கோத்துக்
கவியெலாம் கவினாய்க் கட்டிக்
கற்கண்டாய் இனிக்கக் கேட்ட'
செவியெலாம் களிப்பிக் கின்ற
செம்மலே! சிறக்கச் செப்பும்
அவையெலாம் அன்று நான்;நும்
அன்புமா ணவிதா" னென்றாள்.