பக்கம்:தமிழன், வெள்ளியங்காட்டான்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64

முகைத்திடச் செய்து முந்தும்
முறுவலில் மொழிந்த மாற்றம்,
திகைத்திடச் செய்து, சேரத்
திருத்திடத் தெளிந்தி டும்முன்
தகைத்திடச் செய்து, தானே
தன்னுணர் வுற்ற தன்பின்
நகைத்திடச் செய்த நல்ல
நாடக மாயிற் றன்றே.

"மாந்தளிர் மேனி மாந்த
மாமுகில் குந்திற் றென்னும்
கூந்தலில் முல்லை கோத்துக்
கூன்பிறை யெனவே சூடிக்
காந்தமாய்க் காண்பார் கண்ணைக்
கவர்கின்ற கன்னி! உன்றன்
தீந்தமிழ் பேச்சின் றென்னைத்
திகைத்திடச் செய்த' தென்ருன்.

"தாதூட்டி அளிதன் குஞ்சைத்
தாலாட்டும் பொழுது, தாங்கித்
தீதோட்டுஞ் சமரில் வேல்போய்த்
திரும்பிய மகனைத் திட்டி,
"வாதூட்ட வந்தாய்! வாழ்ந்த
வரலாறு வழுவிற்' றென்று,
மூதாட்டி தன்வ யிற்றை
முனிந்ததாய் மொழிந்தீர் முன்னே!

"போருக்குப் போன வீரன்
பொழுதது போயும், பூதான்
சேரிக்குள் ளென்றேர் செல்வி,
'சிறுவனைத் தந்தோன். செத்தான்;
பாருக்குள் ளிருபே ராறும்
படுமிடம், பகைத்தெ திர்த்த
தீருக்குத் தருவாய் நின்ற
நிலையென நெகிழ்ந்தா ளென்றீர்.