பக்கம்:தமிழன், வெள்ளியங்காட்டான்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65

'மங்காஇவ் வீரம் தோன்றி மல்கியே மகிழ்ந்த நாட்டில், எங்கேயோ இருந்து வந்தோர் எண்ணுாறு வருடம் ஏறிச் சிங்காத னத்தில் குந்திச் செலுத்தின ராட்சி' யென்ருல் , இங்கேயவ் வீரம் என்ன இயற்றிக்கொண் டிருந்த தென்ருள்.

பெண்மகள் கேள்வி, என்றும் பிறக்காத பெரிய கேள்வி! புண்மக ளாகி நொந்து பொழுதெலாம் புலம்பித் தீர்த்த் மண்மகள்! எமது மாதா, மாண்பெலாம் மாய்த்த மாய உண்மைக ளுரைக்க நேரின், உள்ளமே கொதிக்க நேரும்!

ஆரியர், ஆரா யாரை ஆட்கொளு மகத்த ராகிப் "பூரியர், புலைய ரென்றிப் புன்மையைப் பொருத்திப் புல்லாச் சேரிய ராக்கிச் சேர்த்த செல்வமும், செருக்கும் மிக்க வீரியர் தமைப்பொய்த் தெய்வ வெறியாட்ட மாட விட்டார்.

'நெருப்புதான்-, சைவம்; நேர்ந்து நினைமினுே வென்றும், நீரின் பரப்புதான்-, வைணம்; பார்த்துப் பணிமினுே வென்றும் பன்னி, இருப்புதா னின்றித் துஞ்சற் கிருவேறு செய்தார் நாட்டில்! விருப்புதான், வெறுப்பாய் வீரம் வெட்டும்குத் தாகு மாறே!