பக்கம்:தமிழன், வெள்ளியங்காட்டான்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

68

|

ஆராயுங் காலிஃ ‘தொன்றும்
அதிசய மன்றென் 'றாலும்,
‘பாராளின் மகிழ்ச்சிக் கொப்பப்
பனிமலை யெனினும் பற்றா
துாரார்க ளுவந்து சூழ்,
ஒருசடங் கொதுக்கி டாமல்
சீராகச் செய்தாள், செல்வர்
செயத்தக்க தெல்லாம் செய்தே!

நோக்கிற்கு விருந்து, நோற்ற
நுண்ணிடை மகளிர் கூட்ட்ம்;
மூக்கிற்கு விருந்து, மூசும்
முல்லை,மல் லிகை,ரோ சாப்பூ!
நாக்கிற்கு விருந்து, நாடும்
நறியநெய்ப் பண்டம்! காது
தேக்கற்கு விருந்து தீரத்
தெவிட்டாத தமிழ்பா டல்கள்!

கூறாறு சுவைகள் கொண்ட
குறையறு விருந்தில், குந்தி
நூறாறு பேர்க ளுண்ண,
நோக்கொன்ற நுணுகி நோக்கிப்
பேறுாறில் லாமற் பெற்ற
பெரியப்பன் மருகி பேதை
ஊறாறு றாத கண்ணன்
உளத்துான்று மாறு ரைத்தாள்:

 “ ஏரெங்கே எருதெங் கேயென்
றென்றும்தே டாத்தாய் மாமன்
சீரெங்கே? சீர்ப்பா டான
சேர்த்திகை எங்கே? சேர்ந்த
ஊரங்கே நகைக்க இங்கே
உணவுக்காய் வந்தீ ” ரென்றே,
யாருங்கே ளாஇக் கேள்வி
அழுத்தமாய்க் கேட்டா ளங்கே!